Filed under: Uncategorized
மீண்டும் தலைத்தூக்குகிறது ஹிந்து பாசிசத்தின் கொலைவெறியட்டம்.
இன்று பெஙகளூரில் 7 இடங்களில் குண்டு வெடிப்பு….
இதற்கு காரணமாக வழக்கம் போல் பார்ப்பன பயங்கரவாதிகளும்,ஆளும் வர்க்கமும் கூச்சலிடுவது அல் கொய்தா மற்றும் லஸ்கர் இ தொய்பா போன்ற இஸுலாமிய அமைப்புகள் என்று தான்.
ஆனால் கடந்த காலகட்டங்களை பார்க்கும் போது இந்த சதிச்செயலை செய்ய துணிச்சல் கொண்டவர்கள் R..S.S பா.ஜ.க,பஜ்ரங்தள் குண்டர்கள் என்பதற்கு பல நிகழ்வுகளை நாம் எடுத்துக்கொள்ளலாம்.
இவர்கள் அரியணை ஏறி ஒரு சில மாதங்களிலேயே தொடர் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்திராத பெங்களூரில் தொடர்ச்சியாக ஏழு இடங்களில் குண்டு வெடிப்புகள்.
இதை செய்திருப்பது இவர்கள் இல்லை என்றாலும் இதற்கான தீர்ப்புகள் எவ்வாறு வழங்கப்படும் என்பதையும் நாம் கூற முடியும்.
இந்த பயங்கரச்செயலை{குண்டு வெடிப்பு} இவர்கள் தான் செய்தார்கள் என்று நாம் கூறுவதை போல அன்த வழக்கின் தீர்ப்பையும் கூறிவிட முடியும்!
இதற்கான பல உதாரணங்கள் தான் தென்காசி குண்டு வெடிப்பு மற்றும் இன்னும் தீர்ப்பு வெளிவர விடாமல் திட்டமிட்டு மறைத்துக்கொண்டிருக்கும் கோவை குண்டு வெடிப்பு சம்பவம்.
அப்படியல்லாமல் R.S.S பா.ஜ.க,பஜ்ரங்தள் குண்டர்கள் தான் என்றால் நரமாமிச வெறியன் மோடி நடத்திய குஜராத் இனப்படுகொலையின் தீர்ப்பைப்போலத்தான் இதற்கான தீர்ப்பும் வெளியாகும் என்பதை இப்பொழுதே உறுதியாக கூறமுடியும்.
இது எப்படி இருந்தாலும் எதிர் கட்சிகளும்,மத்தியில் ஆளும் கட்சியான காங்கிரசும் என்ன பதில் சொல்லப்போகிறார்கள்? இவர்களும்,மக்களுக்கான கட்சிகள் என்று கூறிக்கொண்டிருக்கும் அனைத்து யோக்கியர்களும் கொலைகாரர்கள் தான் என்பதை அவர்கள் அரங்கேற்றிய கடந்த கால கொலை வெறியாட்டங்களிலிருந்து புரிந்துகொள்ளலாம்.
இதற்கான இரத்த சாட்சியங்கள் தான் இன்னும் ஈரம் காயாமல் நம் கண் முன்னே நின்று கொண்டிருக்கும் பஞ்சாப் சீக்கியப்படுகொலை,ஈழப்படுகொலை,வெண்மணி வெறியாட்டம்,நன்திகிராம் படுகொலைகள்,இன்றும் கண்னெதிரிலேயே குத்திக்குதறப்படும் மணிப்பூர் மண்ணில் நடக்கும் படுகொலைகள் அனைத்தும்.
இது போன்று இன்னும் ஏராளமான படுகொலைகளை கூறிக்கொண்டே போகலாம்.
இதையெல்லாம் பார்க்கும் போது தெரிவது என்னவென்றால் இந்த ஒவ்வொரு நிகழ்வுகளும் நடக்கும் பொழுது ஒருவன் ஆளும் கட்சியாகவும் மற்றவன் எதிர்க்கட்சியாகவுமே இருந்துள்ளான்.அனால் ஒரு நாயும் இதற்காக பிடிபட்டு தண்டிக்கப்படவில்லை ஏனென்றால் அவர்கள் தண்டிக்கப்படாமலிருப்பதற்கான காரணம் முந்தைய ஆட்சியில் இவர்கள் தண்டிக்கப்படாமலிருந்ததே.
இதையெல்லாம் பார்த்தும் இது போலி ஜனனாயகம் என்று தெரியாமல்
இந்தியா ஒரு வல்லரசு,ஜனநாயக நாடு என்று கூறிக்கொண்டிருப்பது ஆயுதத்தை அவர்களிடம் கொடுத்துவிட்டு எங்களை கொல்லுங்கள் என்று சொல்வதைப்போன்று தான் இருக்கிறது.
இவ்வாறு நாம் ஆட்டுமந்தைகளை போல நடந்து கொண்டதன் விளைவு தான் இன்றைய விலைவாசி உயர்வும் அதன் உச்சக்கட்டமான அணுசக்தி ஒப்பந்தமும்.
இனிமேலும் நாம் பொருத்துக்ககொண்டிருப்பதில் அர்த்த்மே இல்லை.
மக்களாகிய நாம் போராடுவது ஒன்றுதான் ஒரே வழி.
உழைக்கும் மக்களாகிய நாம் ஒன்று சேர்வோம்.
தேர்தல் பாதை திருடர் பாதை மக்கள் பாதையே புரட்சிப்பாதை என்ற் முழக்கங்களுடன் பார்ப்பனிய பாசிச பயங்கரவாதத்தையும் மறுகாலணியாதிக்கத்தையும் வேரோடு வெட்டிச்சாய்த்து இம்மண்ணில் புதிய ஜனனாயக புரட்சியை சாதிப்போம்.
Filed under: Uncategorized
போராடும் தருணங்கள்
அன்று நம்மில் ஒருவனாக இருந்த எட்டப்பன்,காந்தி முதல் இன்று நமக்காகவே வாழ்ந்துகொண்டிருப்பது போல ஏமாற்றிக்கொண்டிருக்கும் அவர்களின் வாரிசுகளான பாஸிசத்தையே தங்களது குறிக்கோளாக கொண்ட மன்மோகன் சிங்,சோனியா காந்தி,அத்வானி,வாஜ்பாய்,ஜெயலலிதா,கருனாநிதி,போன்ற எல்லா ஓட்டுக்கட்சி அரசியல் தலைவர்கள் வரை நடைமுறைபடுத்திக்கொண்டிருக்கும் பொருளாதார சாதீய மற்றும் மதக்கொள்கைகள் மக்களை கொள்ளையடித்து அமெரிக்கா போன்ற ஏகாதிபத்திய நாடுகளுக்கு கூட்டிக்கொடுப்பதிலேயே தான் இருக்கிறது.
மன்மோகன் சிங்கின் தலைமையில் நம் நாட்டின் பாதுகாப்பையே அணு சக்தி ஒப்பந்த்தம் என்ற பெயரில் விற்று ஒட்டுமொத்த நாட்டையே பூட்டுபோட்டு சாவியை அவன் கையில் கொடுத்துவிட துடித்துக்கொண்டிருக்கிறது.
என்று தனித்து உயிர் வாழ முடியும்?
“மக்கள் கலை இலக்கிய கழகம்,விவசாயிகள் விடுதலை முன்னணி,புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி“ என்கிற புரட்சிகர அமைப்புகள் வெளியிட்ட ‘அடிமை அடியாள் அணு சக்தி’ என்கிற சிறு வெளியீட்டை இங்கு மீள் பதிவு செய்கிறேன்.
இல்லை
வெட்டி வீசப்போகிறோமா ?
அடிமையாக மாட்டோம்,அடியாளாக மாட்டோம் !

மறுகாலனியாக்கம் என்ற படுகுழிக்குள் இந்தியாவைத் தள்ளிய காட் ஒப்பந்தமும் இப்படித்தான் நம் மீது திணிக்கப்பட்டது, 1994-இல் அமைச்சரவைக்கும் நாடாளுமன்றத்துக்கும் தெரியாமல் ஒரு அதிகாரிகள் குழுதான் அதிலும் கையெழுத்திட்டது. பிறகு நாடாளுமன்றம் அதற்குத் தலையாட்டியது. அந்த மறுகாலனியாக்கம்தான் இன்று நாள் தோறும் மக்களை மரணக்குழியில் தள்ளி வருகிறது.
..
தொடர்புக்கு:
.
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
110/63,என்.எஸ்.கே சாலை,
கோடம்பாக்கம்,
சென்னை-600 024போன்:94448 34519
இரா.சீனிவாசன்
புதிய கலாச்சாரம்
16,முல்லைநகர் வணிக வளாகம்,
2-வது நிழற்சாலை,
அசோக் நகர்,
சென்னை – 600 083
..
நன்கொடை ரூ 5/-
Filed under: Uncategorized
“”1. இந்தியா இனி அணுஆயுதங்கள் தயாரிக்கக் கூடாது; கைவசம் இருக்கின்ற அணுஆயுதங்களை மெல்ல மெல்ல அழிப்பதையும் இறுதியில் அணுஆயுதங்களே இல்லாமல் செய்வதையும் உத்திரவாதப்டுத்த வேண்டும். இது எந்த அளவுக்கு நிறைவேறியிருக்கிறது என்பது குறித்து அமெரிக்க அதிபர் ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
2. அணுஆயுதம் தயாரிப்பதற்குத் தேவையான மூலக்கூறுகளின் உற்பத்தியை நிறுத்துவதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட வேண்டும். இந்தியா குறிப்பிட்ட கால இலக்கிற்குள் இந்த உற்பத்தியை நிறுத்துவதை அமெரிக்க அதிபர் உத்திரவாதப்படுத்த வேண்டும் என்பதுடன் இது குறித்தும் அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு ஆண்டுதோறும் அதிபர் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
3. இந்த ஒப்பந்தம் அமலுக்கு வரவேண்டுமானால் அதற்கு முன் இந்தியாவின் அணு உலைகளை ஆய்வுக்கு உட்படுத்துவது தொடர்பாக சர்வதேச அணுசக்தி ஏஜென்சியுடன் இந்தியா உடன்பாடு செய்து கொள்ள வேண்டும்.
4. இந்தியாவின் அணுசக்தித் திட்டங்கள், அவற்றின் உற்பத்தித் திறன், கையிலுள்ள அணு ஆயுதங்கள், அணுஆயுதம் தயாரிக்க உதவும் மூலக்கூறுகளின் கையிருப்பு, இந்தியாவில் ஆண்டுதோறும் வெட்டியெடுக்கப்படும் யுரேனியத்தின் அளவு ஆகிய எல்லா இரகசியங்கள் குறித்தும் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 31ஆம் தேதிக்குள் அமெரிக்க அதிபர் நாடாளுமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
5. அணு ஆயுதப் பரவல் தடுப்புக்காக அமெரிக்கா உருவாக்கியுள்ள (கட்டைப் பஞ்சாயத்து) அமைப்பில் இந்தியாவும் உறுப்பினராக வேண்டும். 6. இரானின் அணுசக்தித் திட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்கு அமெரிக்காவுக்கு இந்தியா முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.”
இவை மட்டுமின்றி, இந்த ஆண்டின் இறுதியில் கூடவிருக்கும் அமெரிக்க நாடாளுமன்றத்தின் மேலவையான செனட்டில் நிறைவேற்றப்படுவதற்காகப் பின்வரும் திருத்தங்களும் தயாராக உள்ளன.
“”1. இந்திய அணு உலைகள் அனைத்தையும் முழு கண்காணிப்பின் கீழ் கொண்டு வராதவரை தொழில் நுட்பங்களைப் பகிர்ந்து கொள்ள முடியாது.
2. 14 அணுசக்தி நிலையங்களை மட்டும் சர்வதேச அணுசக்தி ஏஜென்சியின் கண்காணிப்புக்கு அனுமதிப்பதாக இந்தியா கூறியுள்ளதை ஏற்கவியலாது; மீதமுள்ள 8 அணுசக்தி நிலையங்களையும் கண்காணிப்புக்குள் கொண்டுவர வேண்டும்.
3. இரான் போன்ற அணுஆயுதமில்லாத நாடுகள் எத்தகைய கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுகின்றனவோ, அதே விதமான கண்காணிப்புக்கு இந்தியாவும் உட்படவேண்டும்; இந்தியாவுக்கு அணுஆயுத நாடு என்ற சிறப்புத் தகுதியோ, விதிவிலக்கோ தரவியலாது.
4. சர்வதேச அணுசக்தி ஏஜென்சியின் சோதனை மட்டுமின்றி அமெரிக்க அதிகாரிகளின் நேரடி சோதனைக்கும் இந்தியா உட்படவேண்டும்.
5. இந்தியாவுக்குச் செறிவூட்டப்பட்ட யுரேனியம் வழங்கலாமென அமெரிக்கா திருப்தியடையாத பட்சத்தில், யுரேனியம் விற்கும் பிற நாடுகளும் இந்தியாவிற்கு அதனை விற்பனை செய்யாமல் தடுக்க அமெரிக்க அரசு முயற்சிக்க வேண்டும்.”
சென்ற ஆண்டு ஜூன் 18ஆம் தேதி புஷ்ஷýம் மன்மோகனும் அமெரிக்காவிலிருந்து வெளியிட்ட கூட்டறிக்கையிலும் இந்த ஆண்டு மார்ச் மாதம் கையெழுத்திடப்பட்ட புஷ் மன்மோகன் சிங் உடன்பாட்டிலும் பூடகமாக மறைக்கப்பட்டிருந்த அமெரிக்க மேலாதிக்க நோக்கங்களை இந்தத் “திருத்தங்கள்’ வெளிக் கொண்டு வந்திருக்கின்றன.
“”இந்தியாவின் இறையாண்மையையும் அணுசக்தி சுயசார்பையும் பாதிக்கின்ற எந்தவித நிபந்தனைகளுக்கும் உட்படமாட்டோம்” என கடந்த மார்ச் மாதத்தில் இந்திய நாடாளுமன்றத்திற்கு உறுதிமொழி அளித்த மன்மோகன் சிங், அமெரிக்க நாடாளுமன்றத்தில் கடந்த 20 நாட்களாக இந்த திருத்தங்கள் குறித்த விவாதங்கள் நடைபெற்றபோது வாய் திறக்கவில்லை. ரசியாவில் நடைபெற்ற ஜி8 நாடுகளின் மாநாட்டிற்குச் சென்றிருந்த மன்மோகன் சிங்கிடம் தங்களது நிருபர் நிர்ப்பந்தித்துக் கேட்டபிறகுதான், திருத்தங்களின் சில அம்சங்கள் கவலையளிப்பதாக மன்மோகன் சிங் பதிலளித்தாரென்று தனது தலையங்கத்தில் (ஜூலை20) குறிப்பிடுகிறது. “”தி இந்து” நாளேடு. அதன் பிறகு புஷ்ஷை சந்தித்த மன்மோகன் சிங், “”போட்ட ஒப்பந்தத்தை ஒருதலைப்பட்சமாக ஏன் மீறுகிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பவில்லை. “”நாங்கள் ஒரு ஜனநாயக நாடு. நாங்கள் எங்களுடைய நாடாளுமன்றத்துக்குப் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது. சில விசயங்கள் எங்களுக்கும் எங்கள் நாடாளுமன்றத்துக்கும் கவலை அளிக்கின்றன” (இந்து, 18.7.06) என்று புஷ்ஷிடம் கவலை தெரிவித்தாராம். ஆவன செய்வதாக புஷ் உறுதியளித்துள்ளாராம்!
..
“”அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடைபெறும் விவாதம் குறித்து நானும் இந்திய வெளியுறவுச் செயலர் சியாம்சரணும் ஜூலை 10ம் தேதியன்று பாரிசில் 5 மணிநேரம் பேசியிருக்கிறோம்” என்று கூறி மன்மோகன் சிங் கும்பலின் குட்டை உடைத்துவிட்டார் அமெரிக்க வெளியுறவுத்துறை இணைச்செயலர் நிகோலஸ் பர்ன்ஸ். “ஆவன செய்வதாக’க் கூறிய புஷ்ஷின் வெள்ளை மாளிகையோ நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ள திருத்தங்களை வரவேற்றிருக்கிறது. திரைமறைவு பேரங்கள் முடிந்துவிட்ட நிலையில் இந்திய மக்களை ஏமாற்றுவதற்காக நடத்தப்படும் நாடகங்கள்தான் மன்மோகன் வெளியிடும் அறிக்கைகள் என்ற உண்மையை மன்மோகன் சிங்கே நிரூபிக்கிறார்.
அணுசக்திக் கமிசனின் முன்னாள் தலைவர் எம்.ஆர். சீனிவாசன், பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் இயக்குநரும், சர்வதேச அணுசக்தி ஏஜென்சியின் இந்தியப் பிரதிநிதியுமான ஏ.என். பிரசாத், அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் முன்னாள் தலைவரான ஏ.ஆர். கோபாலகிருஷ்ணன் என விஞ்ஞானிகள் அனைவரும் ஒருமித்த குரலில் இந்த ஒப்பந்தத்தை எதிர்த்துள்ளனர். அவர்களுடைய வாதங்கள் எதற்கும் மன்மோகன் கும்பல் பதிலளிக்கவில்லை. “”அனாவசியமாகப் பிரச்சினையை மிகைப்படுத்தாதீர்கள். செனட்டிலும் விவாதம் முடிந்து அமெரிக்க சட்டத்தின் இறுதி வடிவம் வரட்டும். அதில் ஏதாவது பிரச்சினை இருந்தால் நான் நாடாளுமன்றத்துக்குத் தெரிவிக்கிறேன்” என்பதுதான் மன்மோகன் சிங் கூறியுள்ள பதில்.
“”அணு ஆயுதம் தயாரிக்கும் உரிமையைப் பறிப்பதால் அது இந்தியாவின் பாதுகாப்புக்கே ஆபத்து” என்று கூச்சலிட்டது பாரதிய ஜனதா. “”சுயேச்சையான வெளியுறவுக் கொள்கை வகுக்க முடியாமல் செய்து இந்தியாவை அமெரிக்காவின் உலக யுத்த தந்திரத் திட்டத்தில் பிணைக்கிறது; அணுசக்தி சுயசார்பை அழிக்கிறது” என்று கூறி இந்த ஒப்பந்தத்திற்கு எதிராக “நாடாளுமன்றத்தின் உணர்வை வெளிப்படுத்தும் தீர்மானத்தை’க் கொண்டுவரப் போவதாக “எச்சரித்தது’ சி.பி.எம். கட்சி. “”அத்தகையதொரு தீர்மானம் கொண்டுவரப்பட்டால் நான் இந்த அரசில் இருக்க மாட்டேன், இந்த அரசாங்கமும் இருக்காது” என்று பதிலுக்கு சி.பி.எம்.மை எச்சரித்தார். பாதுகாப்புத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி. உடனே, தாங்கள் சி.பி.எம்.மின் தீர்மானத்தை ஆதரிக்கப் போவதில்லை என்று நழுவியது பா.ஜ.க. “”அரசாங்கத்தை மிரட்டுவது எங்கள் நோக்கமல்ல, இந்திய அமெரிக்க அணு ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்கான ஒரு சட்டகத்தை முன்மொழிவதுதான் எங்கள் நோக்கம்” என்று விளக்கமளித்திருக்கிறார் “மார்க்சிஸ்டு’ கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் காரத்.
புஷ் மன்மோகன் ஒப்பந்தம் என்பது சொக்கத்தங்கம் போலவும், அதற்கு அமெரிக்க நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படும் திருத்தங்கள்தான் பிரச்சினை என்பது போலவும் ஒரு பொய்ச்சித்திரம் ஓட்டுக்கட்சிகளாலும் ஊடகங்களாலும் திட்டமிட்டே உருவாக்கப்படுகிறது. மாறாக, இன்று அமெரிக்க நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ள திருத்தங்கள் அனைத்தையும் அமெரிக்க தூதர் முல்ஃபோர்டு, கன்டலிசா ரைஸ், நிகோலஸ் பர்ன்ஸ் போன்ற பல அதிகாரிகளும் மார்ச் ஒப்பந்தத்திற்கு முன்னதாகவே பேசியுள்ளனர். இவை தொடர்பாக மன்மோகன் சிங் கூறிய பொய்களும் அப்போதே அம்பலமாகி இருக்கின்றன. (பு.ஜ. மார்ச், ஏப்ரல் 2006)
நாடாளுமன்றத்துக்கு மட்டுமின்றி அமைச்சரவைக்குக் கூடத் தெரியாமல் ஜூன், 18, 2005 அன்று மன்மோகன் சிங் புஷ்ஷடன் இணைந்து அமெரிக்காவிலிருந்து வெளியிட்ட கூட்டறிக்கையும், ஜூன் 28,2005இல் பிரணாப் முகர்ஜி அமெரிக்காவில் கையெழுத்திட்ட இராணுவ ஒப்பந்தமும்தான் மார்ச் மாதம் கையெழுத்தான ஒப்பந்தத்தின் அடிப்படைகள். அந்த அடிப்படையில்தான் இரானுக்கு எதிராக சர்வதேச அணுசக்தி ஏஜென்சியில் இந்தியா வாக்களித்தது. இரானுடனான எரிவாயுக் குழாய் திட்டம் கிடப்பில் போடப்பட்டதற்கும் இதுதான் அடிப்படை. இந்தியாவின் அரசியல், பொருளாதார, இராணுவக் கொள்கைகள் இந்த அடிப்படையிலிருந்துதான் தீர்மானிக்கப்படுகின்றன.
ஆட்சியே போனாலும் ஒப்பந்தத்தை விடமுடியாது என்ற பிரணாப் முகர்ஜியின் மிரட்டலுக்கும், தேசிய கவுரவத்தின் மொத்தக் குத்தகைதாரர்களான பார்ப்பன பாசிஸ்டுகளின் “பல்டி’க்கும், அமெரிக்க ஒப்பந்தத்துக்கு ஆலோசனை வழங்குவதாக “மார்க்சிஸ்டுகள்’ அடக்கி வாசிப்பதற்கும் வேறென்ன விளக்கம் இருக்கிறது? ஆசியாவுக்கான அமெரிக்க அடியாள் என்ற பதவியில் நியமனம் பெறுவதன் மூலம் மறுகாலனியாக்கத்தின் ஆதாயங்களைச் சுவைக்க வெறி பிடித்து அலைகின்றது இந்தியத் தரகு முதலாளிவர்க்கம். அதன் பொருட்டு “இறையாண்மை, சுயசார்பு’ போன்ற பழைய உள்ளாடைகளை அவிழ்த்து வீசிவிட்டு அம்மணமாக நடனமாடவும் தயாராக இருக்கிறது. இநத நிர்வாண நிலையை எழுத்துபூர்வமாக உத்திரவாதப்படுத்த விரும்புகிறது அமெரிக்க வல்லரசு. “”நாமும் ஒரு வல்லரசு என்று கூறிக் கொள்வதால் அதைக் கொஞ்சம் இலைமறை காயாக செய்யக்கூடாதா?” என்பதுதான் இப்போது நாடாளுமன்றத்தைக் கலக்கிக் கொண்டிருக்கும் விவாதம். இந்தக் கேலிக்கூத்தின் முரண்நகையாக பத்தாண்டுகளுக்கு முன் பிரதமர் அலுவலகத்தில் இருந்த அதிகாரிகள் அமெரிக்க உளவாளிகள் என்ற பிரச்சினையை எழுப்பியிருக்கிறார் “தேசபக்தர்’ ஜஸ்வந்த் சிங். இப்போது பிரதமர் நாற்காலியில் அமர்ந்திருப்பவரே ஒரு அமெரிக்க உளவாளிதானே!
..
puthiyajananayagam 2006 aug
Filed under: Uncategorized
அடிமைசாசனமான 123 ஒப்பந்தத்தை தங்களது எஜமானன் அமெரிக்காவின் ஆணைப்படி இந்திய ஓட்டுப்பொறுக்கிகள் நிறைவேற்றி தற்போது அமுலுக்கு வரவிருக்கிறது.
நீங்கள் கேட்கலாம், ஒப்பந்தத்தை காங்கிரஸ்-திமுக-ராஷ்ரிய சனதா-பாமக போன்றவர்கள் தானே ஆதரிக்கின்றனர். சி.பி.எம், சி.பி.ஐ தான் அதனை எதிர்த்து தற்போது கூட்டணியில் இருந்து வெளியேறி வந்துட்டாங்க. பாசகாவும் அதன் அணிகளும் கூட எதிர்த்து வருகின்றனர். அப்பறம் எப்படி இந்திய ஓட்டுப்பொறுக்கிகள் அனைவரையும் அமெரிக்காவின் அடிமைகள் என்று சொல்ல முடியும் என்று.
இதனை விளக்க விவரங்களை கொடுக்கும் முன் ஒரே ஒரு கேள்வியினை போட்டு பதிலை தேடினாலே போதும்.
அந்த கேள்வி:
இந்திய-அமெரிக்க ராணுவ ஒப்பந்தத்தின் ஒரு அங்கமாக வரும் இந்த 123 ஒப்பந்தம் 2005ம் ஆண்டு மத்திய அரசு கையெழுத்துயிட்டது. அப்போது இதனை எதிர்த்து மக்களிடம் பிரச்சாரமோ, கூட்டணி விலகலோ எந்த ஓட்டுப்பொறுக்கிக் கட்சி செய்தது?
இதற்கு பதிலை தேடினால் வருவது ‘இல்லை’
இன்று எல்லா வேலைகளும் முடிந்து 123 ஒப்பந்தம் அமுலுக்கு வர வேண்டிய காலத்தில் இருக்கின்றோம்.
இப்ப 123 ஒப்பந்தம் மூலம் நம் நாடு அடையப்போவதை முதலில் பார்த்துவிட்டு ஓட்டுப்பொறுக்கிகளின் முகத்திரைகளை கிழிப்பது சரியாக இருக்கும்.
தற்போது மொத்த மின்சக்தி தேவையில் 3% ஆக உள்ள அணுமின்சார உற்பத்தியினை இன்னும் 15 ஆண்டுகளுக்கு பிறகு தேவையான மின்சக்தி தேவையில் 7% ஆக மாற்ற 3 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு அணு உலைகளை அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்களிடம் இருந்து வாங்குவது.
உலகம் முழுவதும் விற்காத இந்த அணு உலைகளை வெறும் 4% அளவு மின்சாரத்தை அதிகரிப்பதற்காக 3 லட்சம் கோடியினை கொடுத்து எந்த மடையனாவது வாங்குவானா…உலகிலேயே தோரியம் அதிகமாக இருக்கும் இரண்டாவது நாடான இந்தியாவில் தோரியத்தை விடுத்து யுரேனித்தை இப்படி வாங்குவானா… இதல மின்சாரத்தேவை அதிகரிக்கும் என்று மக்கள் வரிப்பணத்தில் விழிப்புணர்வு பிரசாரம் செய்வானா… என இந்திய ஓட்டுப்பொறுக்கிகளை சட்டையினை பிடிக்க வேண்டிய அளவிற்கு மேலே உள்ள பொருளாதார ரீதியான காரணம் ஒன்றே போதும்.
ஆனால் 123 ஒப்பந்தத்தின் – தாய் ஒப்பந்தமான இந்திய-அமெரிக்க ராணுவ ஒப்பந்தம் என்பது இந்தியாவை அமெரிக்காவின் அரசியல் ரீதியில் நிரந்தர அடிமையாக மாற்றும் பல்வேறு சரத்துகளுடன் அமுலுக்கு வருகிறது.
இதனடிப்படையில் தான் ஈரானுக்கு எதிராக 2 முறை இந்தியா வாக்களித்தது.
2. நிமிட்ஸ் போன்ற அணுசக்தி கப்பல்களை இந்திய கடலோரத்தில் அனுமதிக்க வேண்டும்.
3. அவன் படைகள் தங்கும் இடமாக பேட்டை ரவுடியாக இந்தியா இருக்க வேண்டும்.
4. அவனுடன் ராணுவ ரீதியில் உதவிக்கு இந்திய படைகளை அனுப்ப வேண்டும்.
இப்படி பல சரத்துகளை கொண்டது…. சொல்லி மாளாது என்பதால் இத்துடன் முடிக்கலாம். இப்ப சொல்லுங்க, இவ்வளவு அடிமைத்தனங்களை கொண்டு உள்ள ஒப்பந்தத்தை நிறைவேற்றிய ஓட்டுப்பொறுக்கிகளை சட்டையினை மட்டும் பிடித்தால் போதுமா?
கல்வி கிடைக்கலை, வேலைவாய்ப்பு கிடைக்கலை, மருத்துவம் கிடைக்கலை, விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு – பெட்ரோல் டீசல் விலையில் பாதி அளவு வரி – வீட்டுவாடகை உயர்வு இவை அனைத்தையும் மனதில் ஓட்டுவிட்டு மேலே உள்ள கேள்வியினை மனதில் எழுப்பி பாருங்கள்…. மானம் உள்ள ஒவ்வொருவரின் ரத்தமும் கொதிக்காமல் இருக்காது.
பாஜக
இவன் தான் 123 ஒப்பந்ததின் ஆரம்ப கட்ட வேலைகளை பார்த்தவன். தற்போது கூட நாங்கள் ஆட்சிக்கு வந்தா இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்ற மாட்டோம் என்றா சொல்லுகிறான். கிடையாது, தற்போது உள்ள வடிவத்தில் நிறைவேற்றமாட்டோம் என்று தான் சொல்கிறான். அதிமுகவின் நிலைப்பாடும் இதுதான்.
போலிக்கம்யூனிஸ்டுகள்
4 ஆண்டுகளாக ஒப்பந்தத்தின் வேலைகள் அனைத்தும் நிறைவேறுவதற்கும், தனியார்மயம், தாராளமயம், உலகமயக் கொள்கைகளை நிறைவேற்றுவதற்கும் ஆட்சியினை ஆதரித்து துணை புரிந்த கட்சி. தற்போது கூட ஒப்பந்தத்தை விளக்கும் இவன், இவையெல்லாம் மறுகாலனியாக்கத்தின் வெளிப்பாடு தான் என்பதை மட்டும் சொல்ல மாட்டான். மேலும் தான் ஆளும் மாநிலங்களில் இந்த கொள்கைகளை நடைமுறைப்படுத்தி மக்களை நேரிடையாக கொலை செய்தும் வருகிறான்.
திமுக,பாமக,ராஷ்ரிய ஜனதாதளம்:
இவைகள் பலமுறை ஆட்சிக்கு வந்து கொள்ளையடித்த பணத்தை விட மறுகாலனியாக்கத்திலேயே உச்சகட்ட ஒப்பந்தமான 123 ஆதரிப்பதன் மூலம் கொள்ளையடிக்க முடியும் என்பதால் கண்மூடித்தனமாக ஆதரிக்கும் நிரந்தர அடிமைகள்.
இதனாலதான் இன்று
சமாஜ்வாதி கட்சி- பணமும், அம்பானிக்கு சில சலுகைகளும் கொடுத்ததும் ‘கோமாளி’ கலாம் ஆதரிக்கும் ஒப்பந்தம் என தனது முந்தைய முடிவை மாற்றுகொண்டனர்.
தரகு முதலாளி அம்பானி எம்பிகளுக்கு கோடிக்கணக்கில் பணம் தருகிறான்.
கொலைகாரன் சிபு சோரன் அமைச்சர் பதவி கொடுத்ததும் ஆதரிக்கிறான்.
வானுர்தி நிலையத்திற்கு சரண்சிங் பெயரை வைத்தது அஜித் சிங் ஆதரிக்கிறார்.
இப்ப கூட எவனும் ஒப்பந்தத்தினை எதற்கு எதிர்க்கின்றோம் என்றோ, எதற்கு ஆதரிக்கிறோம் என்றோம் சொல்ல மாட்டேன் என்கிறானுங்க. காங்கிரசை நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிக்கிறோம், எதிர்க்கிறோம் என சுருக்கி அடக்கி வாசித்து மக்களை ஏமாற்றும் தங்கள் மோசடிகளை தொடர்கின்றனர்.
இதுல கூடுதல் சேதி இது போன்ற ஒப்பந்தங்களை நிறைவேற்ற நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற வேண்டிய தேவையில்லை என்பது.
இப்போது சொல்லுங்கள் இந்திய ஜனநாயகத்தின் யோக்கியதையினை. பாராளுமன்றம் என்பது பன்றி தொழுவம் தான் என்பதற்கு இதைவிட ஆதாரம் வேண்டுமா?
ஒன்று மட்டும் உறுதி:
ஓட்டுப்பொறுக்கிகள் இன்று தப்பித்து கொள்ளலாம், ஆனால் இந்த நாட்டையும் மக்களையும் நேசிக்கும் கைகள் வசம், அன்று பாரிசிலிருந்து இன்று காத்மாண்டு வரை உயர்ந்து நிற்கும் கைகள் வசம் இந்திய நாடு வரும் போது ஏற்படுத்தப்படும் மக்கள் சர்வாதிகார மன்றங்கள் முன் தப்பிக்க முடியாது.
அப்போது பிறப்பிக்கப்படும் ஆணைதான் :
1….2…..3….. பாராளுமன்ற & சட்டமன்ற பன்னிகளை பிடியுங்கள்!
நன்றி: www.123-agreement.blogspot.com