குருதி நிலம்


போராடும் தருணங்கள்
July 21, 2008, 12:09 pm
Filed under: Uncategorized

போராடும் தருணங்கள்

 
நான் எனது வீடு,எனது மனைவி,குழந்தைகள்,பெற்றோர்,எனது கார்,எனது ஆடை அணிகள்,எனது உணவு என்று எல்லா வகையான அடிப்ப‌டை மற்றும் சொகுசு தேவைகளை மட்டுமே தனது வாழ்க்கை என்று அதற்கு தேவையானவற்றை பெற நான் சம்பாதிக்கிறேன்,நான் அனுபவிக்கிறேன் என்று கூறிக்கொண்டிருக்கும் எல்லா மட்ட மக்களும்( நடுத்தர மற்றும் கீழ்த்தட்டு )சொல்லிக்கொண்டிருப்பது நான் சம்பாதிக்கிறேன் அனுபவிக்கிறேன் யாரையும் கொள்ளையடிக்கவில்லை,கொல்லவில்லை இதில் என்ன தவறு இருக்கிறது என்பது தான்.
 
எனக்கு மற்றவர்களை பற்றி கவலை இல்லை என அசட்டு துணிச்சலுடன் மிகவும் நிதானமாக குற்ற உணர்ச்சி எதுவும் இல்லாமல் மார்தட்டிக்கொள்கின்றனர். இன்னும் ஒரு சிலர் நான் இப்படியெல்லாம் இல்லாவிட்டால் எல்லோரும் மாறிவிடுவார்களா என்பது தான்.
 
இதிலிருந்து என்ன தெரிகிறது?
இது நம்மில் பெரும்பாண்மையினரின் மன நிலை.
 
இந்த சமுதாயத்தில் நானும் ஒருவன் என்கிற எண்ணம் மறைந்து பணம் ஒன்றே பிரதானம்  உலகம் என்பது தனது வீடு மற்றும் வீட்டில் உள்ளவர்கள் மட்டும் தான் என்ற எண்ணம் மேலோங்கி சக மணிதர்களை பற்றி சிறிதும் கவலைபடாமல் இருப்பது எப்படி?
நம்மில் எத்தனை பேருக்கு சகமனிதனுக்கும் தமக்கும் உள்ள தொடர்பு தெரியும்?
 
இப்படி இருப்பதெல்லாம் நிரந்த்தரம் தானா?
 
இது எங்கு போய் முடியும்?
 
இதற்கு மண்டையை குழப்பத்தேவை இல்லை.
இதற்கு பல வரலாற்று சம்பவங்களும் சமகால நிகழ்வுகளுமே போதுமானது.
அன்று நம்மில் ஒருவனாக இருந்த எட்டப்பன்,காந்தி முதல் இன்று நமக்காகவே வாழ்ந்துகொண்டிருப்பது போல ஏமாற்றிக்கொண்டிருக்கும் அவர்களின் வாரிசுகளான பாஸிசத்தையே தங்களது குறிக்கோளாக கொண்ட‌ மன்மோகன் சிங்,சோனியா காந்தி,அத்வானி,வாஜ்பாய்,ஜெயலலிதா,கருனாநிதி,போன்ற எல்லா ஓட்டுக்கட்சி அரசியல் தலைவர்கள் வரை நடைமுறைபடுத்திக்கொண்டிருக்கும் பொருளாதார சாதீய மற்றும் மதக்கொள்கைகள் மக்களை கொள்ளையடித்து அமெரிக்கா போன்ற ஏகாதிபத்திய நாடுகளுக்கு கூட்டிக்கொடுப்பதிலேயே தான் இருக்கிறது.
 
சிறிது யோசித்தால் தெரிந்துவிடும்,
 
{GATT}காட்  ஒப்பந்தம் முதல் அணுசக்தி ஒப்பந்தம் வரை, பாபர் மசூதி இடிப்பிலிருந்து துவங்கி மும்பை  தொடர் குண்டு வெடிப்பு,கோவை குண்டு வெடிப்பு,குஜராத் படுகொலை இது போன்று நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல லட்சம் மக்களை கொன்று குவித்த அமெரிக்க அடிவருடியான
இந்திய‌ ஆளும் வர்க்கம் மற்றும் அம்பானி கம்பெனி, டாட்டா,விப்ரோ,போன்ற தரகுமுதலாளிகளும்
IBM,மைக்ரோசாப்ட்,கோக்,என்ரான்,போன்ற பன்னாட்டு நிறுவனங்களும் சேர்ந்து
மன்மோகன் சிங்கின் தலைமையில் நம் நாட்டின் பாதுகாப்பையே அணு சக்தி ஒப்பந்த்தம் என்ற பெயரில் விற்று ஒட்டுமொத்த நாட்டையே பூட்டுபோட்டு சாவியை அவன் கையில் கொடுத்துவிட துடித்துக்கொண்டிருக்கிறது.
 
சிறப்புப்பொருளாதார மண்டலம் என்கிற பெயரில் நாட்டையே கூறு போட்டு எல்லாவித பன்னாட்டு மற்றும் தரகு முதலாளிகளுக்கு விற்றுவிட்டு நமது நாட்டின் விவசாயிகளையும் உழைக்கும் மக்களையும் கொன்று குவிக்கின்றது.
இதற்கு மிகக்கொடூரமான‌ உதாரணம் சிங்கூர்,நந்திகிராம் படுகொலைகள்.
 
இவ்வாறு சிறப்புப்பொருளாதார மண்டலம்,விலைவாசி உயர்வு,பட்டினிச்சாவு,விவசாயிகள் தற்கொலை என்று தொடர்ச்சியாக எல்லா தரப்பு மக்களையும் காவு வாங்கிக்கொண்டிருக்கும் இந்த‌ மறுகாலனியாக்க பலிபீடத்தில் நின்று கொண்டு நம்மால் எப்படி ‘நான்,எனது,என் வீடு,என் குடும்பம்,என் சுகம்’
என்று தனித்து உயிர் வாழ முடியும்?
 
அவர்களை பொறுத்தவரை (ஆளும் வர்க்கம்,தரகு ம‌ற்றும் பன்னாட்டு முதலாளிகள்) நாமெல்லாம் ஆடு,மாடு மந்தைகள் தான்.
 
நமது நிலை பிராய்லர் கடைகளில் உள்ள கோழிகளை போன்றது தான். கூண்டுக்குள் மொத்தமாக கோழி கூட்டங்கள் அதுவும் ரகம் வாரியாக( நாமும் சாதி மற்றும் வர்க்க ரீதியாக பிளவுபட்டுள்ளோம்)
கோழிக்கடைக்காரன் தான் நமது மன்மோகன் மாமா போன்ற ஐந்து வருட காண்ட்ராக்ட் கம்பெனிகள்.
இந்த கோழிப்பண்னைகளுக்கெல்லாம் சொந்தக்காரன் தான் அமெரிக்கா போன்ற ஏகாதிபத்திய நாடுகள்.
கோழிக்கடைக்காரன் அதற்கு தேவையான உணவுகளை போட்டு கோழிகளை கொழுக்க வைக்கிறான் கறிக்காக. எல்லா கோழிகளும் பக்கத்து கோழி வெட்டப்படுவதை பார்த்து கொஞ்சமும் சலனமில்லாமல் தானும் கொல்லப்படப்போகிறோம் என்ற உணர்வு கூட இல்லாமல் தனது இரை மீதே குறியாக மேய்ந்துகொண்டிருக்கிறது. இந்த கோழிகளுக்கு போடப்படும் இரை போன்றது தான் நாம் வாங்கிக்கொண்டிருக்கும் நான்கு முதல் ஆறு இலக்க சம்பளம்.
நாடு மறுகாலனி ஆவதை நாம் புரிந்து கொள்ளும் விதமாக நான் சமீபத்தில் வாசித்த‌
“மக்கள் கலை இலக்கிய கழகம்,விவசாயிகள் விடுதலை முன்னணி,புரட்சிகர மாணவர்‍‍ இளைஞர் முன்னணி,புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி என்கிற புரட்சிகர அமைப்புகள் வெளியிட்ட ‘அடிமை அடியாள் அணு சக்தி’ என்கிற சிறு வெளியீட்டை இங்கு மீள் பதிவு செய்கிறேன்.
 
அதை வாசித்த பிறகு நம் நாட்டை இந்த ஓட்டுக்கட்சி அரசியல்வாதிகளும்,ஆளும் வர்க்கமும்,அம்பானி போன்ற கொள்ளைக்கார கும்பலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு ஒப்பந்தங்கள் மூலமாக நம்மையெல்லாம் முழு அடிமையாக்கப்போவதை தெள்ளத்தெளிவாக உணர முடியும்.
 
இதற்கு பின்பும் என்ன தான் நாம் ஓடி ஒழிந்தாலும் வெட்டு விழுவது உறுதி! இதற்கெல்லாம் நாம் என்ன செய்ய போகிறோம்?
 
வெட்டுபட்டு சாகப்போகிறோமா?
இல்லை
வெட்டி வீசப்போகிறோமா ?
இனியும் தயங்குவதில் அர்த்தமில்லை. இது தனி மனித சாகசம் அல்ல,அமைப்பாக அணி திரள்வோம்.என்ன செய்ய வேண்டும் என்று விவாதிப்போம்.இதற்கு முதல் கட்டமாக இந்த போலி சுதந்திரத்தையும் போலி ஜன‌நாயக ஒட்டுக்கட்சி பொறுக்கிகளையும் எதிர்க்கும் விதமாக ஓட்டுப்போடுவதை நிறுத்துவோம்.மக்களை அணிதிரட்டி புதிய ஜன‌நாயக புரட்சிக்கு வித்திடுவோம்.
 
தொடர்புடைய பதிவுகள்:
 
இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம்- அம்பலமாகிறது அடிமைச் சாசனம்!
 

அமெரிக்க-இந்திய இராணுவ-அணுசக்தி ஒப்பந்தங்கள்: அமெரிக்க அடிமைத்தனத்தில்

 
 
அமெரிக்க அடிமை நாய் மன்மோகன் வழங்கும் 123 அல்லது அடிமை சாசனம் !!
 
அணுஒப்பந்தமா? – அடிமை சாசனமா?
 
 
 

அடிமையாக மாட்டோம்,அடியாளாக மாட்டோம் !

 
மறுகாலனியாக்கம் என்ற படுகுழிக்குள் இந்தியாவைத் தள்ளிய காட் ஒப்பந்தமும் இப்படித்தான் நம் மீது திணிக்கப்பட்டது, 1994-இல் அமைச்சரவைக்கும் நாடாளுமன்றத்துக்கும் தெரியாமல் ஒரு அதிகாரிகள் குழுதான் அதிலும் கையெழுத்திட்டது. பிறகு நாடாளுமன்றம் அதற்குத் தலையாட்டியது. அந்த மறுகாலனியாக்கம்தான் இன்று நாள் தோறும் மக்களை மரணக்குழியில் தள்ளி வருகிறது.
மறுகாலனியாதிக்க அடிமைத்தத்தின் கோரமான உச்சக் கட்டம்தான் இந்த அனுசக்தி ஒப்பந்தமும் இந்திய அமெரிக்க இராணுவ ஒப்பந்தமும்! மறுகாலனியாதிக்கக் கொள்கை பொதுத்துறைகளைப் பன்னாட்டு முதலாளிகளுக்குத் தாரைவார்த்திருக்கிறது. விளைநிலங்களைப் பிடுங்கி பன்னாட்டு முதலாளிகளுக்குப் பட்டா போட்டுக் கொடுத்திருக்கிறது. விவசாயிகளைத் தற்கொலைக்குத் தள்ளியிருக்கிறது. இப்போது அது நம்முடைய மானத்தையும், பெயரளவு இறையாண்மையையும் கூடத் காவு கேட்கிறது. ஆக்கிரமிப்பு வெறி பிடித்த அமெரிக்க வல்லரசுக்கு நம்மையும் நம் நாட்டையும் அடியாளாக மாறச் சொல்கிறது. இதை நாம் அனுமதிக்கப் போகிறோமா? இந்த அவமானத்தைச் சகித்துச் கொள்ளப் போகிறோமா?
நாட்டுபற்றும் தன்மான உணர்ச்சியும் கொண்ட ஒவ்வொரு வரும் சிந்திக்க வேண்டும். இந்தத் துரோக ஒப்பந்தத்தை முறியடிக்கக் களத்தில் இறங்க வேண்டும்.
அணுசக்தி ஒப்பந்தத்தைத் தூக்கியெறிவோம்!
அமெரிக்க – இந்திய இராணுவ ஒப்பந்தத்தை கிழித்தெறிவோம்!
அமெரிக்க மேலாதிக்க எதிர்ப்பின் ஆசியத்தளமாக இந்தியாவை மாற்றியமைப்போம்!
– வெளியீட்டில் இருந்து
..
தொடர்புக்கு:
.
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
110/63,என்.எஸ்.கே சாலை,
கோடம்பாக்கம்,
சென்னை-600 024போன்:94448 34519
பிரதிகள் கிடைக்குமிடம்:.
இரா.சீனிவாசன்
புதிய கலாச்சாரம்
16,முல்லைநகர் வணிக வளாகம்,
2-வது நிழற்சாலை,
அசோக் நகர்,
சென்னை – 600 083
..
நன்கொடை ரூ 5/-

Leave a Comment so far
Leave a comment



Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s



%d bloggers like this: